/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு
தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு
தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு
தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2024 04:44 AM
புதுச்சேரி: தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கோவிந்த சாலை, புதுநகரை சேர்ந்தவர் அமலோற்பவம், 67; இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
இவரது மகள் ஏஞ்சலின், இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்திருந்தார். வீட்டை எழுதிக்கொடுக்கும்படி அமலோற்பவமிடம், மகள் ஏஞ்சலின் மற்றும் மருமகன் ஆகியோர் கேட்டுள்ளனர்.
இதற்கு அவர் மறுக்கவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்த அமலோற்பவமை தாக்கினர். அமலோற்பவம் புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் ஏஞ்சலின், இவரது கணவர் என இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.