/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி பெருமாள் அலங்காரம் சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி பெருமாள் அலங்காரம்
சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி பெருமாள் அலங்காரம்
சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி பெருமாள் அலங்காரம்
சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி பெருமாள் அலங்காரம்
ADDED : ஜூலை 04, 2024 03:18 AM
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (5ம் தேதி) ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர், தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடாகி உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்தசேவை நடக்கிறது.
தன்வந்திரி பெருமாள் அலங்காரம் முன்னிட்டு தன்வந்திரி பெருமாளின் மகாபிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த ஒளஷதம் லேகியம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப் படுகிறது.