/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 04, 2024 03:18 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர் மரிய லுாயிஸ், ஜெயசுந்தரி, சாந்தி, தேவிகா, ருக்மணி, அரசு ஊழியர் சம்ளேன பொருப்பாளர் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிக்கொடை, 6வது ஊதிய குழு பரிந்துரை செய்து வழங்க வேண்டிய 50 சதவீத ஊதிய நிலுவை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.