Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேபிள் டி.வி., ஒயர்களால் மின்கம்பங்கள் சாயும் அபாயம்

கேபிள் டி.வி., ஒயர்களால் மின்கம்பங்கள் சாயும் அபாயம்

கேபிள் டி.வி., ஒயர்களால் மின்கம்பங்கள் சாயும் அபாயம்

கேபிள் டி.வி., ஒயர்களால் மின்கம்பங்கள் சாயும் அபாயம்

ADDED : ஜூலை 08, 2024 04:23 AM


Google News
புதுச்சேரி: கேபிள் டி.வி., ஒயர்களால் பல இடங்களில் மின்கம்பங்கள் விழும் அபாயம் உள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும், பேனர்களும் சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் விழ கேபிள் டி.வி., ஒயர்கள் முக்கிய காரணமாக இருந்தது.

புதுச்சேரி நகரின் பிரதான சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்கள, சாலையோரங்களில் தெரு விளக்குகளுக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பங்களில், கேபிள் டிவி நிறுவனத்தினர் ஒயர்களை கட்டிக் கொண்டு செல்கின்றனர். ஆனால் இவை தாறுமாறாக குறுக்கு நெடுக்குமாக கொண்டு செல்லப்படுகின்றன.

'தானே' புயலில் கேபிள் டிவி ஒயர்களே, ஏராளமான மின்கம்பங்கள் கீழே விழுவதற்கு காரணமாக இருந்தன. தானே புயலில் பாடம் கற்ற பிறகும், கேபிள் டிவி ஒயர்களை கொண்டு செல்லும் விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், பிரதான சாலைகளில் கேபிள் டி.வி., ஒயர்கள் அலங்கோலமாக தொங்கிக் கொண்டுள்ளன. இவை நகரின் அழகை கெடுப்பதோடு, தற்போது சாலையில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் பலவீனமாக உள்ளன. அதனுடைய அடிப்பகுதி அரித்து எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளன.

மழைக்காலத்திற்குள் இந்த பலவீன கம்பங்களை கணக்கெடுத்து, அவற்றை அகற்ற வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us