/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலரிப்பு தடுப்பு பணிகளை துரிதப்படுத்த எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை கடலரிப்பு தடுப்பு பணிகளை துரிதப்படுத்த எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை
கடலரிப்பு தடுப்பு பணிகளை துரிதப்படுத்த எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை
கடலரிப்பு தடுப்பு பணிகளை துரிதப்படுத்த எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை
கடலரிப்பு தடுப்பு பணிகளை துரிதப்படுத்த எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : ஜூன் 16, 2024 05:45 AM

புதுச்சேரி: காலாப்பட்டு கடலோர கிராமங்களில் நடந்து வரும் கடலரிப்பு தடுப்பு பணிகளை துரிப்படுத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் சென்று ஆலோசனை நடத்தினர்.
காலாப்பட்டு கடலோர கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதால், வீடுகள் சேதமடைந்து வருகின்றன. அதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதரத்தை இழந்து வருகின்றனர்.
இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ., முயற்சி எடுத்ததன் பேரில், கடலரிப்பை தடுக்கும் வகையில், காலாப்பட்டு கடலோர பகுதியில் கல் கொட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடந்து வந்தது.
லோக்சபா தேர்தல் காரண மாக அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காலாப்பட்டு கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கற்கள் கொட்டும் பணி மந்தமாக நடந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளுடன் காலாப்பட்டு கடலோரா பகுதிகளில் காலாப்பட்டு கடற்கரை பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இப்பணிகள் 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடப்பதாகவும், மக்கள் உயிருக்கு அபத்து ஏற்படும் நிலை இருப்பதாக, தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெற்றும் பணிகளை துவக்காமல் இருந்து வருகிறது.
அதனால், போர்கால அடிப்படையில், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.