/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜகோபுரம் வாசக்கால் அமைக்கும் பணி துவக்கம் ராஜகோபுரம் வாசக்கால் அமைக்கும் பணி துவக்கம்
ராஜகோபுரம் வாசக்கால் அமைக்கும் பணி துவக்கம்
ராஜகோபுரம் வாசக்கால் அமைக்கும் பணி துவக்கம்
ராஜகோபுரம் வாசக்கால் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 05:33 AM

திருக்கனுார்: சுத்துக்கேணி முத்து மாரியம்மன் கோவிலில் ராஜ கோபுரத்திற்கான வாசக்கால் அமைக்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, சுத்துக்கேணி கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் ராஜ கோபுரத்திற்கான வாசக்கால் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று பூஜை செய்து வாசக்கால் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கோவில் திருப்பணிக்காக முதல் தவணையாக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பா.ஜ., நிர்வாகிகள் முத்தழகன், தமிழ்மணி, கலியபெருமாள், அ.தி.மு.க., ஜெ., பேரவை மாநில தலைவர் சுத்துக்கேணி பாஸ்கர் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.