/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 12, 2024 05:32 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளில், சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவ மற்றும் மாணவியர் தங்கும் விடுதிகளில், 2024-25, கல்வியாண்டு சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த, 4ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவி யரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த சேர்க்கைக்கான தங்கும் விடுதிகளில் சேர விருப்பம் உடைய, பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ - மாணவியர் விண்ணப்பத்தை பெற, அந்தந்த விடுதியின் நல அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
இங்கு தங்கி படிக்கும், மாணவ - மாணவி யருக்கு உணவு, உடை, உணவு அல்லாத பொருட் கள் மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும்.
லாஸ்பேட்டை, அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியிலும், பாகூர், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
கூடுதல் விபரங்களுக்கு, சாரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம்.