/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு
ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு
ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு
ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜூலை 15, 2024 02:17 AM
புதுச்சேரி: ஓட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்திய உரிமையாளர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அகல்யா, ஏட்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, கடற்கரையோரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.
இதையெடுத்து, அங்கிருந்த ஒரு காஸ் சிலிண்டரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டல் உரிமையாளர் சின்ன வீராம்பட்டினம் மறைமலையடிகள் சாலை அருள்குமார், 37; மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.