Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்சி., நர்சிங் நுழைவுத் தேர்வு ஆயிரத்து 952 பேர் பங்கேற்பு

பி.எஸ்சி., நர்சிங் நுழைவுத் தேர்வு ஆயிரத்து 952 பேர் பங்கேற்பு

பி.எஸ்சி., நர்சிங் நுழைவுத் தேர்வு ஆயிரத்து 952 பேர் பங்கேற்பு

பி.எஸ்சி., நர்சிங் நுழைவுத் தேர்வு ஆயிரத்து 952 பேர் பங்கேற்பு

ADDED : ஜூலை 15, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நடந்த, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கான, பொது நுழைவுத்தேர்வில், ஆயிரத்து 952 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில், 2 அரசு செவிலியர் கல்லுாரிகள், 10 தனியார் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடாக, 484 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நடப்பாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு மூலம், நிரப்பப்பட உள்ளன.

இதையொட்டி,புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு, நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடந்தது.

புதுச்சேரியில் உப்பளம் இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி, பெத்தி செமினார் பள்ளி, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, வாசவி இன்டர் நேஷனல் பள்ளி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, காரைக்காலில் நிர்மலா ராணி மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அம்மையார் மேல்நிலைப்பள்ளி, மாகியில் கஸ்துார்பா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி, ஏனாமில் ராஜிவ்காந்தி அரசு ஆங்கில நடுநிலைப்பள்ளி என, 10 மையங்களில் தேர்வு நடந்தது.

இத்தேர்வுக்கு காலை 8:00 மணி முதல் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத்துவங்கினர். காலை 8:30 மணி முதல், தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டு, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள சான்று சரி பார்க்கப்பட்டு, தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மொபைல், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், தடை விதிக்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்பட்டது.

இந்த தேர்வுக்கு புதுச்சேரி - 1,645; காரைக்கால் - 476; மாகி - 68; ஏனாம் - 61 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 250 மாணவ - மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில், புதுச்சேரி - 1,407 பேர், காரைக்கால் - 444 பேர், மாகி - 53, ஏனாம் - 48 பேர் என மொத்தம், 1 ஆயிரத்து 952 பேர் தேர்வு எழுதினர். அதேசமயம், புதுச்சேரி - 238; காரைக்கால் - 32; மாகி - 15; ஏனாம் - 13; என, 298 பேர் பங்கேற்கவில்லை. இத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் மூலம், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us