/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிமை பொருள் வழங்கல் அலுவலகம் எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகை குடிமை பொருள் வழங்கல் அலுவலகம் எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகை
குடிமை பொருள் வழங்கல் அலுவலகம் எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகை
குடிமை பொருள் வழங்கல் அலுவலகம் எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகை
குடிமை பொருள் வழங்கல் அலுவலகம் எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகை
ADDED : ஜூன் 14, 2024 06:19 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் வழங்க துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையில் கடந்த மூன்று மாதமாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.
இதனை கண்டித்து நேற்று 10:30 மணியளவில் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த துறை இயக்குனர் தயாளன், எஸ்.பி., வீரவல்லவன், நேரு எம்.எல்.ஏ., மற்றும் பொது நல அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. துறை அமைச்சர் அல்லது துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என, போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து அரசு செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன் மொபைல் போனில் நேரு எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு பேசினார். ஓரிரு தினங்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதையேற்று 1:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
நேரு எம்.எல்.ஏ., கூறுகையில், 'தகுதியான ஏழைகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்காமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு சிவப்பு ரேஷன் கார்டு தருகின்றனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வதாக துறை செயலர், கலெக்டர் உறுதியளித்தால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம்' என்றார்.