/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி திரும்பிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி திரும்பிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
புதுச்சேரி திரும்பிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
புதுச்சேரி திரும்பிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
புதுச்சேரி திரும்பிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஜூலை 26, 2024 04:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜ., எம்எல்.ஏ.,க்களும், ஆதரவு தருகின்ற சுயேட்சை எம்.எல்.ஏ.,க் களும் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர்.மேலும், வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்காக எம்.எல். ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் டில்லியில் முகாமிட்டு இருந்தனர்.
தற்போது பார்லிமென் டில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதால், அமித்ஷாவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜான்குமார் எம்.எல்.ஏ., நேற்று காலை புதுச்சேரிக்கு வந்தார். தொடர்ந்து, நேற்று இரவு மற்ற எம்.எல்.ஏ.,க்களும் புதுச்சேரி திரும்பினர்.
உட்கட்சி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நாளை புதுச்சேரிக்கு வருகிறார். இதனால், பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.