ADDED : ஜூலை 26, 2024 04:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
தாசில்தார் பிரித்திவி தலைமை தாங்கி, உலக நீரில் மூழ்கி ஏற்படும் உயரிழிப்புகளை தடுக்கும் தின விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க் கள், தீயணைப்பு துறை வீரர்கள் பங்கேற்றனர்.