Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிறந்த நாள்

அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிறந்த நாள்

அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிறந்த நாள்

அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிறந்த நாள்

ADDED : ஜூன் 02, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிரபாதேவி வீரராகு தனது பிறந்த நாள் விழாவை இன்று (2ம் தேதி) கொண்டாடுகிறார்.

இதையொட்டி, இன்று காலை 7:30 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் முதியோருக்கு உணவு வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, 8:00 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கின்றனர். 9:00 மணிக்கு சந்தோஷ் இல்லத்தில் பிரபாதேவி வீரராகு உணவு வழங்குகிறார்.

மதியம் 1:00 மணியளவில் ராஜிவ்காந்தி சிக்னல் அருகே உள்ள அக்கார்டு ஓட்டலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடுகிறார். மதியம் 2:00 மணிக்கு உழவர்கரை தொகுதி இளைஞர்களுக்கு கிரீன்பேலஸ் உணவகத்தில் அறுசுவை விருந்து அளிக்கிறார்.

பின்னர், உழவர்கரை தொகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,கள், நிர்வாகிகள், தொகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டு பிரபாதேவி வீரராகுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

-Advt





      Our Apps Available On




      Dinamalar

      Follow us