/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ADDED : ஜூன் 01, 2024 05:56 AM
புதுச்சேரி : ஜிம் பயிற்சியாளர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி (எ) மணிகண்டன், 35: ஜிம் பயிற்சியாளர்.
கடந்த 29ம் தேதி அப்பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விக்கியை ஒரு கும்பல் கல்லால் அடித்து கொலை செய்தது.
இதுதொடர்பாக, திப்புராயப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், 33; ஸ்ரீகாந்த், 28; வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த அசோக், 36; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். இவர்களில், அசோக் மீது, ஏற்கனவே 2 கொலை வழக்குகளும், கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் மீது, அடிதடி வழக்குகள் உள்ளன.
கொலைக்கான காரணம் குறித்து இவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
சாமிநாதன் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற விக்கி மற்றும் அசோக் இருவரும், இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகில் பீர் குடித்தனர்.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் மற்றும் சிறுவன் ஒருவனும் பீர் குடித்தனர். 2 பாட்டில் பீர் குடித்ததும் விக்கிக்கு போதை அதிகமானது. அப்போது, மற்றவர்கள், '2 பீருக்கே மட்டையாகி விட்டாயே... நாங்கள் 5 பீர் கூட சாதாரணமாக குடிப்போம்' என கூறினர். அப்போது ஒருவர், விக்கியை தகாத வார்த்தையால் திட்டினார்.
ஆத்திரமடைந்த விக்கி, 4 பேரையும் சரமாரியாக தாக்கினார். உடன் 4 பேரும், 'எங்களையே அடிக்கிறாயா' எனக்கேட்டு, கல்லால் நெற்றி பொட்டில் தாக்கியதில் விக்கி மயங்கி விழுந்ததும் தலையில் கிரானைட் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மூவரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவனை, சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.