Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

ADDED : ஜூன் 20, 2024 03:48 AM


Google News
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் நாளை ( 21ம் தேதி) புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள எண் 22, 14வது குறுக்கு சாலை, அண்ணா நகரில் சென்னை அப்போலோ புரோட்டான் தகவல் மையம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை 21ம் தேதி மதியம் 12:00 மணி முத்ல 2:00 மணிவரை சென்னை புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்ஸன் ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் மற்றும் சிறுநீர் ஓட்டத்தில் பிரச்னைகளுக்கு சோதனை செய்து, சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us