தனியாருடன் போட்டியிடும் அமுதசுரபி
தனியாருடன் போட்டியிடும் அமுதசுரபி
தனியாருடன் போட்டியிடும் அமுதசுரபி
ADDED : ஜூலை 28, 2024 06:32 AM
கூட்டுறவு நிறுவனமாக 40 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அமுதசுரபி, மளிகை, துணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது. பல்வேறு காரணங்களால் நலிவ டைந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
அமுதசுரபிக்கு கை கொடுக்கும் நோக்கத்தில், மதுபான பார்கள், பெட்ரோல் பங்குகள் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அமுதசுரபி மேலாண் இயக்குனராக பொறுப்பேற்ற அய்யப்பன், நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், தனியாருக்கு போட்டியாக, பிரிமியம் பிராண்ட் மதுபானங்களை விற்பதற்கு, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 'எலைட் ஒயின் ஷாப்'பை அமுதசுரபி திறந்து உள்ளது.
இங்கு உயர்ரக மது வகைகளுடன், பிரான்ஸ் நாட்டின் 8 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒயின்கள் விரைவில் இங்கு விற்பனை வரவுள்ளது.