/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் நிறுத்தம் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் நிறுத்தம்
அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் நிறுத்தம்
அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் நிறுத்தம்
அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் நிறுத்தம்
ADDED : ஜூலை 18, 2024 11:04 PM

வில்லியனுார்: அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இல்லாமல் மூன்று மாதங்களாக ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் அரியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அரியூர், ஆனந்தபுரம், சிவராந்தகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு பணியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் இயக்க ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் பணியாற்றி வந்தார்.
ஒப்பந்த டிரைவரின் பணிகாலமும் முடிவடைந்ததால் கடந்த மூன்று மாதங்களாக ஆம்புலன்ஸ் இயக்க டிரைவர் இல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. மேலும் மருத்துவமனைக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டுவருவதற்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால் ஒவ்வொரு முறையும் வில்லியனுார் அல்லது திருபுவனை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் எதிர்பார்த்து காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனுார், அரியூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆம்புலன்ஸ்கள் இயக்க துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமித்தனர். அவர்களின் பணிக்காலம் முடிவடைந்து விட்டால் மேற்கொண்டு டிரைவர்கள் வேலைக்கு வராமல் நின்று விட்டனர். இதனால் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாமலே மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
விபத்து காலம் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி புதுச்சேரி நலவழித்துறை ஆம்புலன்ஸ் இயக்க தேவையான டிரைவர்களை உடனடியாக நியமிக்கவேண்டும்.
அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய டிரைவர்களுக்கு காலநீட்டிப்பு செய்து உடனடியாக பணியில் சேர்த்து உயிர்காகஉதவவேண்டும்.