/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரம் எஸ்.ஆர்.எஸ்., பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சாரம் எஸ்.ஆர்.எஸ்., பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சாரம் எஸ்.ஆர்.எஸ்., பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சாரம் எஸ்.ஆர்.எஸ்., பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சாரம் எஸ்.ஆர்.எஸ்., பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூன் 01, 2024 04:44 AM

புதுச்சேரி, : எஸ்.ஆர்.எஸ்., பள்ளி யின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சாரம், எஸ்.ஆர்.சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த, 1990 முதல், 2000ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள், 'எஸ்.ஆர்.எஸ் 90' என்ற வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி உள்ளனர்.
கடந்த, 2021ல் உருவாக்கப்பட்ட இந்த குழு மூலம், அந்த பள்ளிக்கும், அங்கு படிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்வில் பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி யின் முன்னாள் மாணவரும், அரசு பள்ளி ஆசிரியருமான மோகன்ராஜ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, முன்னாள் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் நினைவுப் பரிசு அளித்தனர்.
மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணி கள் அடங்கிய சிறப்பு மலரை, முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை வெளியிட தலைமை ஆசிரியர் பிரேமலதா பெற்றுக் கொண்டார்.
முன்னாள் ஆசிரியர் மஞ்சினி உட்பட பலர் பங்கேற்றனர்.