ஏ.ஐ.டி.யு.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 05:51 AM

புதுச்சேரி : தொழிலாளர் துறையை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி தொழிலாளர் துறையின் சீர்கேடுகளை சரிசெய்ய வலியுறுத்தி, ஏ.ஐ. டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் வழுதாவூர் சாலை, காந்தி நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார்.
தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிேஷகம், பொருளாளர் அந்தோணி கண்டன உரையாற்றினார். தொழிலாளர் துறை முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவான துறையாகவும், துறைக்கு தனி ஆணையர் இல்லை. கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டக்கூலி திருத்தி அமைக்கப்படவில்லை.
தொழில் தாவாக்களில் சமரச அதிகாரி முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார், துறையில் பல பணியிடங்கள் காலியாக உள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் முடக்கப்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
துணை தலைவர்கள் சந்திரசேகரன், முருகன், மோதிலால், சிவகுருநாதன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.