/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரோட்டரி எலைட்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரோட்டரி எலைட்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
ரோட்டரி எலைட்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
ரோட்டரி எலைட்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
ரோட்டரி எலைட்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
ADDED : ஜூன் 28, 2024 06:29 AM

புதுச்சேரி: ரோட்டரி எலைட்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ரோட்டரி எலைட்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஹோட்டல் அண்ணாமலையில் நடந்தது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தலைவராக சந்திரசேகரன், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக பிரகாஷ் ஆகியோர் பதவியேற்றனர். உதவி ஆளுநர் செந்தில் நாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.
சிசு பாலா இல்லத்திற்கு, இளங்கோவன் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அரிசி வழங்கினார். விழாவில் முன்னாள் தலைவர் பச்சைநாயகம், முன்னாள் செயலாளர் தமோதரன், குமார், செந்தில்குமார், குணசேகரன், காமாட்சி, கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணன் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.