/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரோமானியர்களின் ஏற்றுமதி தளமாக விளங்கிய அரிக்கன்மேடு பகுதியை சீரமைக்க கோரிக்கை ரோமானியர்களின் ஏற்றுமதி தளமாக விளங்கிய அரிக்கன்மேடு பகுதியை சீரமைக்க கோரிக்கை
ரோமானியர்களின் ஏற்றுமதி தளமாக விளங்கிய அரிக்கன்மேடு பகுதியை சீரமைக்க கோரிக்கை
ரோமானியர்களின் ஏற்றுமதி தளமாக விளங்கிய அரிக்கன்மேடு பகுதியை சீரமைக்க கோரிக்கை
ரோமானியர்களின் ஏற்றுமதி தளமாக விளங்கிய அரிக்கன்மேடு பகுதியை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2024 11:58 PM

அரியாங்குப்பம் : ரோமானியர்களின் கடல் சார்ந்த வியாபார ஏற்றுமதி தளமாக இருந்த அரிக்கன்மேடு அடிப்படை வசதியில்லாமல் பொலிவிழந்து இருப்பதை தொல்லியல் துறையினர் சீரமைக்கவேண்டும்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் அரிக்கன்மேடு பகுதி 34 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது.
இந்த பகுதி 17ம் நுாற்றாண்டிற்கு முன்பு ரோமானியர்கள், புதுச்சேரிக்கு வந்து, கடலிலிருந்து ஆற்று வழியாக அரிக்கன்மேடு பகுதிக்கு வந்து தங்கி வியாபாரம் செய்துவந்தனர்.
ரோமானியர்களுக்கு பின் 17ம் நுாற்றாண்டில் வந்த பிரெஞ்சுகாரர்கள் அரிக்கன்மேடு பகுதியை கைப்பற்றி சர்ச் கட்டி பாதிரியார்கள் படிக்கும் பள்ளியாக பயன்படுத்தி வந்தனர்.
இந்தியா 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின், பிரெஞ்சு காரர்கள் அந்த இடத்தை படிப்படியாக விட்டு சென்றனர்.
பின் அந்த இடத்தில் இருந்த சர்சை பராமரிப்பு இன்றி சேதமடைந்து, தற்போது சுவர்கள் மட்டுமே உள்ளது.
கடந்த 1945ம் ஆண்டு, பிரெஞ்சுகாரர் மார்டின் வீலர் என்பவர் அரின்கன்மேடு பகுதியில் அகழ் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, 1980ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அரிக்கன்மேடு பகுதியை கையகப்படுத்தி, பராமரித்து வந்தனர்.
பின் 1987ம் ஆண்டு விமலா பீக்லீன் என்பவர் அகழ் ஆய்வு செய்து அங்கு கிடைத்த பொருட்களை மத்திய தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.