Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா 

108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா 

108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா 

108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா 

ADDED : ஜூன் 19, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் தீபாவளி போனஸ் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கவில்லை. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் 5 சதவீத ஊதியம் உயர்த்தப்படவில்லை. இதுதவிர கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்த ரூ. 5000 பணமும் வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நேற்று சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சங்க கவுரவத் தலைவர் ஜெயபால், சங்கத் தலைவர் புருேஷாத்தமன் தலைமை தாங்கினார்.

பொதுச்செலயாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பக்கிரிசாமி, அய்யனார், அதியமான், சந்திரசேகர், சுகுமார், ராஜேந்திரகுமார், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் 24ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us