/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை
காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை
காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை
காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை
ADDED : ஜூன் 20, 2024 09:11 PM
காரைக்கால்: காரைக்கால் மாங்கனிதிருவிழாவை முன்னிட்டு சுமார் 30டன் மாம்பழங்கள் விற்பனைக்காக வந்துள்ளது.
காரைக்கால் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு மாம்பழங்கள் அதிகளவு விற்பனையாகும். இதற்காக வியாபாரிகள் சேலம்,கும்பகோணம், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் 30 டன் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில் சில இடங்களில் மாம்பழத்தை ரசாயனக்கல்லை பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர். இதை உண்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
இது குறித்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மாம்பழம் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.