/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கள்ளச்சாராயம் அருந்திய 16 பேருக்கு ஜிப்மரில் டையாலிசிஸ் சிகிச்சை கள்ளச்சாராயம் அருந்திய 16 பேருக்கு ஜிப்மரில் டையாலிசிஸ் சிகிச்சை
கள்ளச்சாராயம் அருந்திய 16 பேருக்கு ஜிப்மரில் டையாலிசிஸ் சிகிச்சை
கள்ளச்சாராயம் அருந்திய 16 பேருக்கு ஜிப்மரில் டையாலிசிஸ் சிகிச்சை
கள்ளச்சாராயம் அருந்திய 16 பேருக்கு ஜிப்மரில் டையாலிசிஸ் சிகிச்சை
ADDED : ஜூன் 20, 2024 09:12 PM
புதுச்சேரி: கள்ளச்சாராயம் அருந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேருக்கு டையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி விஷச்சாராயம் அருந்திய 19 பேர் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு,உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.16 பேரும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்கள் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து வருகின்றது.அவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.