/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார் கவிழ்ந்து விபத்து கான்ஸ்டபிள் உட்பட 2 பேர் பலி கார் கவிழ்ந்து விபத்து கான்ஸ்டபிள் உட்பட 2 பேர் பலி
கார் கவிழ்ந்து விபத்து கான்ஸ்டபிள் உட்பட 2 பேர் பலி
கார் கவிழ்ந்து விபத்து கான்ஸ்டபிள் உட்பட 2 பேர் பலி
கார் கவிழ்ந்து விபத்து கான்ஸ்டபிள் உட்பட 2 பேர் பலி
ADDED : ஜூன் 26, 2024 02:32 AM
மரக்காணம் : இ.சி.ஆரில் நடந்த கார் விபத்தில், புதுச்சேரி கான்ஸ்டபிள் உட்பட இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி, பூரணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம், 36; வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று சம்மன் பணிக்காக இனோவோ காரில் சென்னை சென்றார்.
அங்கு வேலை முடிந்ததும் இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவருடன், நோணாங்குப்பம் ஜான்சன் மகன் சாமுவேல்,28; சீத்தாராமன் மகன் சூர்யா,20; பூரணாங்குப்பம் பாவாடை மகள் பிரித்தி,20; ஆகியோர் சென்றனர்.
மாலை 3:00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் வெண்ணாங்குபட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அங்கு சாலை பணிக்காக வைத்திருந்த மணல் மூட்டை மீது கார் மோதி, எதிர் திசையில் உருண்டு மண் மேட்டில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் செல்வம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காரில் மதுபாட்டில்கள், பிரியாணி பொட்டலங்கள் சிதறி கிடந்தது.
டிரைவர் சீட் அருகில் அமர்ந்திருந்த சாமுவேல், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரித்தீ, சூர்யா ஆகியோரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சாமுவேல் நேற்று இரவு இறந்தார். சூர்யா, பிரித்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.