ADDED : மே 11, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முள்ளோடை – பரிக்கல்பட்டு சாலையில், வாலிபர் ஒருவர் குடிபோதையில், பொது மக்களை திட்டி ரகளை ஈடுபட்ட கடலுார் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் 36; என்பவரை கைது செய்தனர்.
இதேபோால், முள்ளோடை சந்திப்பு அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடலுார் மாவட்டம் , புவனகிரி அடுத்த வில்லியநல்லுார் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
