ஆற்றுக்கு வரும்; ஊருக்குள் நுழையாது; கட்டுப்பாடு காக்கும் காட்டு யானைகள்
ஆற்றுக்கு வரும்; ஊருக்குள் நுழையாது; கட்டுப்பாடு காக்கும் காட்டு யானைகள்
ஆற்றுக்கு வரும்; ஊருக்குள் நுழையாது; கட்டுப்பாடு காக்கும் காட்டு யானைகள்
ADDED : மார் 22, 2025 04:30 AM

ஊர் எல்லைக்கு வந்து ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு, யாருக்கும், எவ்வித தொல்லையும் கொடுக்காமல், கட்டுப்பாட்டுடன் யானைகள் வனத்துக்குள் திரும்பும் நடைமுறையால், கேரள மாநிலம் ஆனக் குளம் கிராமம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வனப்பகுதி களில் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதனால், வனத்தில் ஏற்படும் இடப்பற்றாக்குறை, தண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்காக, யானைகள் வெளியில் வருவது வழக்கமாகி உள்ளது.
தமிழகத்தில், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், யானைகள் ஊருக்குள் நுழைவது, விவசாய நிலங்களில் புகுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துஉள்ளன.
இதில், மனிதர்களால் யானைகள் கொல்லப்படுவதும், யானைகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது.
கோவையில் வால்பாறை போன்ற பகுதிகளில், யானைகள் வரத் துவங்கி விட்டால், சில கிராம மக்கள் பல நாட்கள் இரவில் துாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற தகவல்களையே பார்த்து கேட்டு பழகி விட்ட பலருக்கும், கேரள மாநிலம் ஆனக் குளம் கிராமத்தில் கூட்டமாக வரும் யானைகள்,ஆற்றில் பல மணி நேரமாக தண்ணீர் குடித்துவிட்டு, எவ்வித சலசலப்பும் இன்றி, மீண்டும் அமைதியாக காட்டுக்குள் செல்வது, வழக்கமான நிகழ்வாக உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மாங்குளம் அருகே அமைந்துள்ளது ஆனக் குளம் கிராமம். இந்த கிராமத்தின் வழியே,ஈட்டசோலையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் ஒருபக்க கரையை ஒட்டி கடைகள், வீடுகள், வழிபாட்டு தலங்கள், 'ரிசார்ட்'கள் அடங்கிய அழகிய கிராமம்உள்ளது.
ஆற்றின் மறுபக்கத்தில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனத்தில், அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன. அது மட்டுமல்லாது, பழங்குடியின மக்களும் வாழ்ந்துவருகின்றனர்.
தினசரி நிகழ்வு
ஈட்டசோலையாற்றில் வேறு எந்த பகுதிகளையும் விட, இந்த குறிப்பிட்ட பகுதிக்கு தினமும் மாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாகவருவது வழக்கம்.
ஒவ்வொரு குழுவி லும்,10 முதல் 20 யானைகள் வருகின்றன. அதிகபட்சமாக ஒரே சமயத்தில், 67 யானைகள் வரை இங்கு வந்துள்ளன.
நீண்ட நேரமாகதண்ணீர் குடிக்கும் யானைகள், பின்னர் எவ்வித சலசலப்பும் இன்றி, மீண்டும் வனத்துக்குள் செல்வது அன்றாட நிகழ்வாக அமைந்துள்ளது.
இங்கு, கடந்த 1912 முதல் யானைகளின் வருகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை பார்க்க, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணியர் தினமும் மாலையில் ஆனக்குளத்தில் குவிகின்றனர்.
தமிழகம் உள்ளிட்டபல்வேறு மாநி லங்களில் இருந்து வரும் உள்நாட்டு சுற்றுலா பயணியர் மட்டு மல்லாது, வெளிநாட்டுசுற்றுலா பயணியரும் யானைகளை பார்க்க, இங்கு குவிகின்றனர்.
தினமும் மாலை 5:00 மணிக்கு மேல் வர துவங்கும் யானைகள், நள்ளிரவு கடந்தும் இங்கு தண்ணீர் குடிப்பது வழக்கமாகி உள்ளது.
வார நாட்களில், 200க்கும் மேற்பட்டோர்இங்கு கூடுகின்றனர். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில், 500க்கும் மேற்பட்ட மக்கள், யானைகளை பார்க்க இங்கு கூடுகின்றனர்.
மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை பொது மக்கள், சுற்றுலாபயணியர் இங்கு இருக்க வனத் துறையினர்அனுமதிக்கின்றனர்.
எதிர்மறை எண்ணம் இல்லை
இதுகுறித்து, ஆனக்குளத்தை சேர்த்த பிரதாப் கூறியதாவது:
தினமும் கூட்டமாக வந்தாலும், யானைகள் இங்கு கரையை தாண்டி, மறுபக்கத்தில் உள்ள கிராம மக்களுக்கு எவ்வித தொல்லையும் தருவதில்லை.
சில சமயங்களில், யானை கூட்டத்துக்குள் மோதல் ஏற்பட்டாலும், அவை ஊருக்குள் வருவதில்லை. மோதலில் தோற்கும் யானைகள் காட்டுக்குள் திரும்பி சென்றுவிடும்.
ஆற்றில், இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும், தண்ணீரில் சிலவகை தாது உப்புகள் அதிகமாக இருப்பதால் தான், யானைகள் இங்கு தண்ணீர் குடிக்கின்றன. ஆனால், ஒருபோதும் இங்கு யானைகள் தண்ணீரை தங்கள் மீது தெளிப்பதும், மூழ்கி குளிப்பதும் இல்லை.
காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வருவது தான், எங்கள் பகுதிக்கு பிரதான வாழ்வாதாரமாக மாறி உள்ளது.
யானைகளுக்கு மனிதர்கள் எவ்வித தொல்லையும் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள, வனத்துறையினர், இங்கு 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால், காட்டு யானைகள் குறித்து, எங்கள் கிராம மக்களுக்கு எவ்வித எதிர்மறை எண்ணமும் இல்லை. இது, சுற்றுலா பயணியரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -