வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அரசியல் செய்யக்கூடாது
வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அரசியல் செய்யக்கூடாது
வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அரசியல் செய்யக்கூடாது

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அரசை குறை கூறி உள்ளார். எங்காவது விபத்து நடந்தால் கூட, அதை விபத்தாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
ஒரு மரத்தில் பூ வைத்து, காயாகி அது தானாக கனிந்தால் கூட, அது தன்னால் தான் கனிந்ததாக கூறும் தற்பெருமைக்குச் சொந்தக்காரர் அண்ணாமலை. அதே, பூ கனியாகாமல் காயகாவே இருந்து விட்டால், அதற்கும் தமிழக அரசு தான் காரணம் என குற்றம்சாட்டுவார்.
வண்ணாரப்பேட்டை மருத்துவமனையில் ஏற்பட்ட மின் வெட்டு சரி செய்யப்பட்டு விட்டது.
அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வீட்டுக்குள் இருந்தபடியே எதையும் சொல்லக் கூடாது. மக்களுக்கு பிரச்னைகள் என்றால், ஒரு அரசியல்வாதியாக அதை தீர்க்க அவரும் முன் வர வேண்டும். அதை செய்யாமல், வீட்டுக்குள் இருந்தபடியே அரசியல் பேசுவது நியாமல்ல.
சேகர்பாபு, தமிழக அமைச்சர்