Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி விருந்து

UPDATED : ஏப் 24, 2025 03:07 AMADDED : ஏப் 23, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
சென்னை:தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 29ம் தேதி முடியவுள்ள நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விருந்தளித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்த விருந்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் பங்கேற்றனர். விருந்தில் சைவ, அசவை வகைகள் பரிமாறப்பட்டன.

அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவருடனும், பழனிசாமி உரையாடியுள்ளார். பா.ஜ.,வுடனான கூட்டணியை சில எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர்களிடம் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது; அதனால் கிடைக்கப் போகும் சாதகமான அம்சங்கள் என்னன்ன என்பது குறித்து எடுத்துக் கூறியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us