'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'
'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'
'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'

சென்னை: “தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:



சாத்தான்குளம் வழக்கை தாமதம் செய்வது ஏன்? இதை எல்லாமல் மறைக்கவே, ஓரணியில் திரள்வோம் என்று பிரசாரம் செய்கின்றனர்.
தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார். தமிழக வளர்ச்சிக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் முதல்வர் எதுவுமே செய்யாததைத்தான் குறை சொல்கிறோம்
இனி எல்லா போராட்டங்களிலும் அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து செயல்படும். கூட்டணிக்கு விஜய் வருவது குறித்து கருத்து சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன; நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.