காங்கிரசின் 'இண்டி' கூட்டணியில் புகைச்சல்...ஆரம்பம்: தொகுதி பங்கீட்டில் கட்சிகளுக்குள் சலசலப்பு
காங்கிரசின் 'இண்டி' கூட்டணியில் புகைச்சல்...ஆரம்பம்: தொகுதி பங்கீட்டில் கட்சிகளுக்குள் சலசலப்பு
காங்கிரசின் 'இண்டி' கூட்டணியில் புகைச்சல்...ஆரம்பம்: தொகுதி பங்கீட்டில் கட்சிகளுக்குள் சலசலப்பு
ADDED : செப் 14, 2025 12:16 AM

பீஹார், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்திருக்கிறது. இது, சட்டசபை தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. கேரளாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய அக்கட்சியின் பொதுச்செயலரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான டி.ராஜா, தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரங்களில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள், கூட்டணியின் பலத்தை குறைத்து வருகிறது என கவலை தெரிவித்திருந்தார்.
பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் இந்த பே ச்சை நிச்சயம் யாராலும் மறுக்க முடியாது.
லோக்சபாவுக்கு, 2024ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜ னநாயக கூட்டணி, 293 இடங்களில், எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி, 234லும் வென்றன.
லோக்ச பா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நின்று பாடுபட்டதால், இண்டி கூட்டணி அதிக இடங்களில் வெ ன்றது.
இதனால், பா.ஜ.,வால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை.
ஆனால், அதன்பின், இண்டி கூட்டணி கட்சிக்குள் ஒற்றுமை நீடிக்கவில்லை. அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப கூட்டணிக்குள் உள்ள கட்சிகள் மோதிக் கொள்கின்றன.
வரும் சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களைப் பெறுவதற்கு, கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே பெரும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இது, இண்டி கூட்டணிக்குள் இருக்கும் ஒற்றுமை, நம்பிக்கையை குலைக்க ஆரம்பித்துஇருக்கிறது.
சமாஜ்வாதி இண்டி கூட்டணியில் சமா ஜ்வாதி மற்றும் காங்., இடையிலான உறவு மிக முக்கியமாக பார்க்கப் படுகிறது. தொழிலதிபர் கவுதம் அதானி குறித்து காங்கிரஸ் மிக ஆக்ரோஷமாக விமர்சித்து வருகிறது.
இது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிடிக்கவில்லை. இதனால், பார்லி.,யில் காங்., தலைமையில் நடந்த போராட்டங்களை சமாஜ்வாதி கடந்த காலங்களில் புறக்கணித்தது.
உத்தர பிரதேச சட்ட சபைக்கு, 2027ல் நடக்க உள்ள தேர்தலில், காங்., அதிக தொகுதிகளை கேட்டு பெறும் முனைப்பில் இருக்கிறது. ஆனால், இதற்கு சமாஜ்வாதி ஒப்புக்கொள்ளுமா என தெரியவில்லை.
ஒருவேளை தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பு, நிச்சயம் தேர்தல் பணிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
திரிணமுல் காங்கிரஸ் அடுத்த பிரதான கட்சியாக திரிணமுல் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, 'இண்டி' கூட்டணிக்கு ராகுல் தலைவராக இருப்பதை ஏற்க மறுக்கிறார். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை காங்கிரசுக்கு சரியான பிடிமானம் இல்லை.
எனவே, கூட்டணியில் இருந்தாலும், தேர்தலில் காங்கிரஸ் பலம் பெறுவதை, திரிணமுல் காங்., விரும்பாது. இது, நிச்சயம் கூட்டணியின் பலத்தை குறைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பற்றி சொல்லவே தேவை இல்லை. தேசிய அளவில் காங்கிரசுடன் கைகோர்த்தாலும், மாநில அளவில் எதிரியாகவே இரு கட்சிகளும் செயல்படுகின்றன.
குறிப்பாக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வுக்கும், காங்கிரசுக்கும் சுத்தமாக ஆகாது.
பகையாக இருக்கும் கேரளாவில், காங்கிரஸை விட மார்க்சிஸ்ட் கம்யூ., அதிக செல்வாக்குடன் வலம் வருகிறது. ஆனால், காங்கிரசுடன் நட்பாக இருக்கும் மேற்கு வங்கத்தில், இந்த கூட்டணி மிகவும் பலவீனமாக தான் உள்ளது. அங்கு கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரசுக்கு எதிராக காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தனியாக களம் காண்கின்றன.
இத னால், மேற்கு வங்கம், கேரள சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளுக்கு பெரும் ச வால் காத்திருக்கிறது.
தி.மு.க., தமிழகத்தில், தங்களுடைய நிழலில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவதாக, தி.மு.க.,வைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் அவ்வப்போது விமர்சித்து வருவதை புறந்தள்ளிவிட முடியாது.
லோக்சபாவுக்கு 2024ல் நடந்த தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கணிசமான ஓட்டுகளை பெற்றிருந்தனர். இதன் பின்னணியில், தி.மு.க.,வின் உழைப்பு இருக்கிறது.
ஆனால், காங்கிரஸ் இந்த வெற்றியை பெரிதாக நினைக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில், 25 தொகுதிகளை மட்டுமே தி.மு.க., ஒதுக்கி இருந்த நிலையில், வரும் தேர்தலில், 40 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது, கூட்டணிக்குள் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் பீஹாரில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. வரும் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக, லாலுவின் மகள் தேஜ-ஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். ஆனால், இதை காங்கிரசின் ராகுல் ஏற்கவில்லை.
இதனால், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் பெரும் மோதல்கள் ஏற்படும் என, பரவலாக பேசப்படுகிறது. தேசிய அளவில் பா.ஜ.,வை வீழ்த்த இண்டி கூட்டணி அமைக்கப்பட்டாலும், மாநிலங்களில், தனித்தனி தீவுகளாக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரிந்திருக்கின்றன.
சட்டசபை தேர்தல் கள் நெருங்கும் சூழலில், இந்த உரசல் நிச்சயம் பெரிதாகும். அது, வெற்றி வாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து ம் என, விமர்சகர்கள் கருதுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -