ஊதிய உயர்வு அறிவிப்புக்கு 'டாஸ்மாக்' ஊழியர்கள் அதிருப்தி
ஊதிய உயர்வு அறிவிப்புக்கு 'டாஸ்மாக்' ஊழியர்கள் அதிருப்தி
ஊதிய உயர்வு அறிவிப்புக்கு 'டாஸ்மாக்' ஊழியர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 24, 2025 05:02 AM

சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்பட இருப்பதாக, சட்டசபையில் நேற்று முன்தினம், அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதற்கு, பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச்செயலர் தனசேகரன் அறிக்கை:
தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவர் என்ற தேர்தல் வாக்குறுதி, எப்போது நிறைவேற்றப்படும் என்பது தெரியவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல் வழங்கப்பட்ட 2,000 ரூபாய் தொகுப்பூதிய உயர்வை, இந்த அரசு மூன்றாண்டுகள் எதுவும் செய்யாமல், அதை நகல் எடுத்து செயல்படுத்தி இருப்பது, ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.