Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!

ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!

ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!

ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!

UPDATED : ஜூன் 22, 2025 07:31 AMADDED : ஜூன் 22, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
கோவை: ரகசியமாக பேசும் பழக்கம் தங்களுக்கு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் அந்த கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் மதிமுக சேர்வதற்கு அந்த கட்சி பேச்சு நடத்தி வருவதாகவும், துரை வைகோ மத்திய அமைச்சராக பதவி ஏற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது பற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். கோவையில் பேட்டியளித்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 'தி.மு.க., உடன் கரம் கோர்ப்ப தில், எந்த மாற்றமும் இல்லை. வேறெந்த கட்சியுடனும் சேர்வ தற்கான அவசியமும் இல்லை.'இதுகுறித்து ரகசி யமாக பேசும் பழக்கமும் எங்களுக்கு இல்லை.

கூட்டணி தொடர்பாக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கற்பனையாக, பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். 'பா.ம.க., வலுவான கட்சி; தற் போது அங்கு நில வுவது உட்கட்சி பிரச்னை.தந்தை, மகன் கருத்து வேறு பாடால், இரு அணி போலத் தெரிகிறது. 'கூட்டணியில் பா.ம.க., இணை யுமா என்பதை, தி. மு.க., தலைமையே முடிவெடுக்கும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us