Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடிக்கம்பத்தைச் சுற்றி செருப்பு; தி.மு.க.,வுடன் தொடரும் மோதல் காரணமா

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடிக்கம்பத்தைச் சுற்றி செருப்பு; தி.மு.க.,வுடன் தொடரும் மோதல் காரணமா

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடிக்கம்பத்தைச் சுற்றி செருப்பு; தி.மு.க.,வுடன் தொடரும் மோதல் காரணமா

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடிக்கம்பத்தைச் சுற்றி செருப்பு; தி.மு.க.,வுடன் தொடரும் மோதல் காரணமா

ADDED : மார் 26, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரையில் கூட்டணி கட்சியான தி.மு.க.,வுடன் தொடரும் மோதல் போக்கால், கட்சி மாநாட்டிற்கு ஊன்றப்பட்ட கொடி கம்பத்தைச் சுற்றி செருப்புகள், துடைப்பம் வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ., புகார் தெரிவித்துள்ளது.

மதுரையில் ஏப்.,2 முதல் மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய மாநாடு நடக்கிறது. இதற்காக மார்ச் 20 ல் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் கட்சி நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக அக்கட்சியை சேர்ந்த துணைமேயர் நாகராஜன் தரப்பினர் கொடி கம்புகளை ஊன்றினர். அப்பகுதியில் சலுான் கடை நடத்தும் தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் வீடு முன்பும் எதிர்ப்பை மீறி கொடி கம்பு ஊன்றப்பட்டது. அதைச் சுற்றி செருப்புகள், துடைப்பத்தை போட்டு கொடியை அவமதித்ததாக கம்யூ., நிர்வாகி கஜேந்திரமுத்து ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வட்ட செயலாளருக்கு தொடர்பு


துணைமேயர் ஆதரவாளர்கள் கூறியதாவது: இப்பகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சிலர் துணைமேயருக்கு எதிராக பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த கட்சி நிகழ்ச்சி நடத்தினாலும் இதுபோல் கொடிகள் ஊன்றுவது வழக்கம் தான்.

அதுபோல் தான் கம்யூனிஸ்ட்டும் கொடி வைத்தது. தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் வீட்டின் முன் உள்ள கொடியில் செருப்புகளை போட்டு அவமதிப்பு செய்தனர். இதன் பின்னணியில் தி.மு.க., வட்ட செயலாளர் உள்ளிட்டோர் உள்ளனர் என்றனர்.

முன்விரோதம் காரணம்


முருகானந்தம் கூறியதாவது: துணைவேந்தர் தரப்பிற்கும் எங்களுக்கும் வீட்டின் மேல் கடன் பெற்றது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் என் அம்மா எதிர்ப்பு தெரிவித்ததை மீறி வேண்டும் என்றே வீட்டின் முன்பகுதியில் கொடிக்கம்பம் ஊன்றினர். வீடும், சலுான் கடையும் அடுத்தடுத்து உள்ளதால் அந்த கம்பம் இடையூறாக இருந்தது.

இந்நிலையில் மறுநாள் கடையை திறக்க நான் வந்தபோது கொடிக் கம்பம் முன் செருப்பும், துடைப்பமும் கிடந்தன. இதுகுறித்து எங்கள் கட்சி வட்டச் செயலாளரிடம் தகவல் தெரிவித்தேன். ஆனால் நான் தான் அவ்வாறு செய்தேன் என என் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர் என்றார்.

கூட்டணி கட்சி என்ற போதும் சமீபகாலமாக மா.கம்யூ., கட்சி தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மதுரையிலும் அடிக்கடி முட்டல் மோதல் அரங்கேறுகின்றன.

மதுரையில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என போராட்டம் நடத்திய எம்.பி., வெங்கடேசனுக்கும், அமைச்சர் மூர்த்திக்கும் மோதல் வெடித்தது. மாநகராட்சி கூட்டத்தில் 'ரோடுகள் மோசமாக இருப்பதாகவும், மாநகராட்சி சொத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க தவறி வருவதாகவும்' மேயர் இந்திராணி பொன்வசந்த் (தி.மு.க.,) முன்னிலையில் துணைமேயரான நாகராஜன் கடும் குற்றச்சாட்டுகளை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us