Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன: சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன: சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன: சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன: சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

UPDATED : மார் 25, 2025 01:39 PMADDED : மார் 25, 2025 10:27 AM


Google News
Latest Tamil News
சென்னை: சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன என அமைச்சர் துரைமுருகன் தெவித்தார்.

இது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: மாநிலத்தில் இப்போது, 104 சுரங்கங்கள், 1,496 குவாரிகள் உள்ளன. 2024- - 25ம் ஆண்டில், 408.62 லட்சம் டன் பெரும் கனிமங்கள், 618.27 லட்சம் கன மீட்டர் சிறு கனிமங்கள், 18.97 லட்சம் டன் தீக்களிமண், சிலிக்கா மணல் உள்ளிட்ட கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

கனிமங்களில் இருந்து, 2020 - -21ல், 983 கோடி ரூபாய், 2021- - 22ல் 1,212 கோடி ரூபாய், 2022 - -23ல் 1,679 கோடி ரூபாய், 2023- - 24ல் 1,735 கோடி ரூபாய், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, 1,074 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், 6,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்திலிருந்து கனிமங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதாக, இங்கே பேசிய எம்.எல்.ஏ.,க்கள் குறிப்பிட்டனர். அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடை செய்ய முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிம உரிமைத்தொகை, மாவட்ட கனிம நிதி, பசுமை நிதி செலுத்தி, இரண்டு சோதனைச் சாவடிகளில் சோதனை செய்த பின்னரே கனிமங்களை, மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அனுமதியின்றி சிறு கல்லைக்கூட கொண்டு செல்ல முடியாது. எனவே, கனிம வளங்கள் கொள்ளை போகிறது என, இனி யாரும் சொல்ல முடியாது. சட்டத்திற்கு உட்பட்டே, வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.

அனுமதியின்றி கனிமங்களை கடத்துபவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த நான்காண்டுகளில், அனுமதியின்றி கனிமங்களை கொண்டு சென்ற, 21,163 வாகனங்களை பிடித்துள்ளோம். ஆய்வு செய்து, 152 குவாரிகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us