ஆளுங்கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு வருவர்: நயினார் நாகேந்திரன்
ஆளுங்கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு வருவர்: நயினார் நாகேந்திரன்
ஆளுங்கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு வருவர்: நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூன் 16, 2025 02:18 AM

விழுப்புரம்: முருக பக்தர்கள் மாநாட்டை விளம் பரத்துக்காக நடத்த வில்லை எனவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கூட பங்கேற்கலாம் எனவும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:
நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்; விரைவில், கூட்டணியை பேசி முடிப்போம். அமித் ஷா கூறியது போல, தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் பழனிசாமி தான். மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பைக்கில் செல்ல கூட, தி.மு.க., அரசு அனுமதி மறுக்கிறது. முதல்வர் என்றால், அனைத்து கட்சியினருக்கும் சமமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பது, ஒருதலை பட்சமான ஆட்சி.
மாநாட்டிற்கே அனுமதி தர முதல்வர் மறுக்கிறார். அவரை அழைக்கச் சென்றால், பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. இந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என நினைக்கிறார் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. மாநாட்டை விளம்பரத்திற்காக பா.ஜ., பயன்படுத்துவதாக சீமான் சொல்கிறார்.
ஆனால், என்னுடைய கடவுளே முருகன் தான் என்று சொல்லி வந்தார். இப்போது, பா.ஜ., முருகனுக்கு மாநாடு நடத்துகிறது என்றதும், கொந்தளிக்கிறார். எங்களை பொறுத்தவரை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் கூட இந்த மாநாட்டில் பங்கேற்கலாம்.
முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள, அனைத்து கட்சியினரையும் அழைக்கிறோம்; அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். தமிழகம் ஆன்மிக பூமியாக மாறியுள்ளது.
நடிகர் விஜய்க்கும் பா.ஜ.,விற்கும் எந்த தொடர்பும் கிடையாது. தேர்தல் வருவதற்குள், தி.மு.க.,வில் இருந்தே நிறைய பேர் பா.ஜ.,வை நோக்கி வருவர். அதற்காக, எங்களோடு பலரும் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.