Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி

'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி

'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி

'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி

ADDED : ஜூன் 16, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் காது கேளாத குறைபாட்டுடன் இருப்போர், 'ஹியரிங் எய்ட்' கருவிக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவி கொடுப்பதால், பயன்படுத்துவோருக்கு பெரியளவில் பயன் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

குழப்பம்


பிறவிக் கோளாறு, அதிக இரைச்சல், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்நாட்டில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் காது கேளாமை குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, காது கேளாதோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தும் வருகிறது. காதுகேளாமையால் பாதிக்கப்படுவோருக்கு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில், இலவச ஹியரிங் எய்ட் வாங்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ள அரசு மருத்துவமனைகள் வாயிலாக தரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளுக்கு, இக்கருவியை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து தரவில்லை. அதனால், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், குறைந்தது 200 பேர், 'ஹியரிங் எய்ட்' கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 600 பேர் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இது குறித்து, ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:


தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கும், கருவியை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளுக்கு, 'ஹியரிங் எய்ட்' வழங்கப்படவில்லை.

அதனால், இக்கருவி கேட்டு பதிவு செய்து காத்திருப்போருக்கு கொடுக்க முடியவில்லை. அவர்கள் கருவி எப்போது கிடைக்கும் என, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று கேட்டு வருகின்றனர்.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, 50ஹியரிங் எய்ட் வழங்கப்பட்டது. இவற்றை யாருக்கு பொருத்துவது என்ற குழப்பமும் உள்ளது.

ஒரே விதமான கருவி


ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய். அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவியே வழங்கப்படுகிறது. உதாரணமாக, 60 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர், 80 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர் என அனைவருக்கும் ஒரே விதமான கருவி தான் வழங்கப்படுகிறது.

இவற்றால், பலருக்கு பயனில்லை. எனவே, நோயாளிகளின் பாதிப்புக்குஏற்ப, ஹியரிங் எய்ட்வழங்கினால், ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us