லோக்சபா தேர்தல் பிரசாரம்: யாருடைய உழைப்பு அதிகம்?
லோக்சபா தேர்தல் பிரசாரம்: யாருடைய உழைப்பு அதிகம்?
லோக்சபா தேர்தல் பிரசாரம்: யாருடைய உழைப்பு அதிகம்?
ADDED : ஜூன் 02, 2024 04:52 AM

அனைவரும் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், எந்த அரசியல் தலைவர் அதிகளவில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்? இளம் தலைவரான, 53 வயதாகும் ராகுல், 107 பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியுள்ளார். இதைத் தவிர சமூக வலைதளங்களில் அதிக எண்ணிக்கையில் வீடியோக்களும் வெளியிட்டுஉள்ளார்.
காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 81 வயது. இந்த வயதிலும் அவர் கட்சிக்காக, 100 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றதுடன், 70 பேட்டிகளையும் அளித்துள்ளார். பிரியங்கா, 108 பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ நடத்தியுள்ளார்.
ஆனால், இவர்களையெல்லாம் துாக்கி சாப்பிட்டவர் பிரதமர் மோடி தான். 73 வயதாகும் மோடி, கடும் வெயிலில் 206 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார். இதைத் தவிர பல பேரணிகள், 80 பேட்டிகள் என, அசத்தியுள்ளார்.
'பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் ராகுல், அந்த அளவிற்கு கடுமையாக உழைக்கவில்லை என்பது அவரது பிரசாரத்திலிருந்தே தெரிகிறது' என, பா.ஜ.,வினர் கேலி செய்கின்றனர்.