Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ கர்நாடகாவிலும் பா.ஜ., கூட்டணிக்கு சாதகம்; ஆளும் காங்கிரஸ் வட்டாரம் ஏமாற்றம்

கர்நாடகாவிலும் பா.ஜ., கூட்டணிக்கு சாதகம்; ஆளும் காங்கிரஸ் வட்டாரம் ஏமாற்றம்

கர்நாடகாவிலும் பா.ஜ., கூட்டணிக்கு சாதகம்; ஆளும் காங்கிரஸ் வட்டாரம் ஏமாற்றம்

கர்நாடகாவிலும் பா.ஜ., கூட்டணிக்கு சாதகம்; ஆளும் காங்கிரஸ் வட்டாரம் ஏமாற்றம்

ADDED : ஜூன் 02, 2024 04:28 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., கூட்டணி அதிக தொகுதிகளில் வெல்லும் என்று 'எக்ஸிட் போல்' எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

இலக்கு


கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தோல்வியடைந்த பா.ஜ.,வுக்கு லோக்சபா தேர்தல் கவுரவ பிரச்னையாக இருந்தது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற, இரண்டு தேசிய கட்சிகளும் இலக்கு நிர்ணயித்திருந்தன.

இலக்கை எட்ட இரண்டு கட்சித் தலைவர்களும் அதிகபட்சம் போராடினர். இம்முறை லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கைகோர்த்து போட்டியிட்டன.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தன. முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும்; சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக்கின் யாத்கிர் மாவட்டம், சுர்பூர் தொகுதிக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும், மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

70.64 சதவீதம்


கர்நாடகாவில், 2,71,21,407 ஆண்கள்; 2,70,81,748 பெண்கள்; 4,993 திருநங்கையர் என 5,42,08,088 வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர, 46,412 தபால் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 11,24,622 இளம் வாக்காளர்கள்; 3,200 கடல் கடந்து வசிக்கும் வாக்காளர்கள்; 85 வயதுக்கு மேற்பட்டோர் 5,70,168 பேர்; மாற்றுத்திறனாளிகள் 6,12,154 பேர் அடங்குவர்.

எனினும் 1,94,64,075 ஆண்களும், 1,91,92,574 பெண்களும் 1,076 மூன்றாம் பாலினத்தினர் உட்பட 3,86,57,725 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இது 70.64 சதவீதம்.

லோக்சபா தேர்தலில் கடைசிகட்ட ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில் கர்நாடகாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ., கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளன. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எதிர்பார்ப்பு


வாக்குறுதித் திட்டங்கள் தங்களுக்கு அதிக தொகுதிகளை பெற்றுத்தரும் என, முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பு பொய்யாகும் என, கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

கடந்த முறை வெறும் ஒரு தொகுதியில் மட்டும், காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த முறை பெங்களூரு ரூரல் தொகுதியை மட்டும் காங்கிரஸ் வென்றிருந்தது. இந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என, சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதனால் துணை முதல்வர் சிவகுமார், தற்போதைய காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் ஆகியோர் கலக்கத்தில் உள்ளனர். எனினும் இம்முறை கூடுதலாக சில தொகுதிகள் கிடைக்கலாம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல்.

கருத்துக்கணிப்பு எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் நிம்மதியை தரவில்லை. முந்தைய தேர்தலில் வென்ற சில தொகுதிகளை இழக்க நேரிடும் என்பதால், இக்கட்சிக்கு பின்னடைவுதான்.

ம.ஜ.த.,வின் பலம் ஓரளவு அதிகரிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாதகமாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஒருவேளை வெற்றி பெற்றாலும் பாலியல் வழக்குகள் அவரை நிம்மதியாக இருக்க விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ஏற்கனவே, தெளிவாக கூறியுள்ளேன். கருத்துக்கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்று (நேற்று) வெளியான கருத்துக் கணிப்புகளை, பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சிலரின் கருத்துகளை மட்டுமே கேட்டு, தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே இது பற்றி, நான் அதிகம் பேசமாட்டேன். காங்கிரஸ் இரட்டை இலக்கை தாண்டும். இதுகுறித்து, ஆழமாக ஆராய மாட்டேன். சட்டசபை தேர்தலைப்போன்று, லோக்சபா தேர்தலிலும் யாரோ சிலரிடம் கருத்துகளை சேகரித்துள்ளனர்.

சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவர்

சர்வே நிறுவனம் பா.ஜ., கூட்டணி இண்டியா

இந்தியா டுடே 23-25 5-3நியூஸ்18 23 26 5-2டைம்ஸ் நவ் 23-26 5-2ஏ.பி.பி., சி ஓட்டர் 23-25 5-3நியூஸ் நேஷன் 18 10ஜான் கி பாத் 21-23 7-5ரிபப்ளிக் டிவி -- பி மார்க்யூ 21-22 7-6இந்தியா நியூஸ் -- டி -- டைனமிக்ஸ் 23 5இந்தியா டிவி-சி.என்.எக்ஸ்., 19-25 9-3என்.டி.டி.வி., 21-23 7-5



சர்வே நிறுவனம் பா.ஜ., கூட்டணி இண்டியா

இந்தியா டுடே 23-25 5-3நியூஸ்18 23 26 5-2டைம்ஸ் நவ் 23-26 5-2ஏ.பி.பி., சி ஓட்டர் 23-25 5-3நியூஸ் நேஷன் 18 10ஜான் கி பாத் 21-23 7-5ரிபப்ளிக் டிவி -- பி மார்க்யூ 21-22 7-6இந்தியா நியூஸ் -- டி -- டைனமிக்ஸ் 23 5இந்தியா டிவி-சி.என்.எக்ஸ்., 19-25 9-3என்.டி.டி.வி., 21-23 7-5



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us