காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி
காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி
காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

சென்னை: 'வீண் செலவுகளுக்கு, பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, சத்துணவு ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது, 'சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆளுங்கட்சியானதும் அவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் பரிசளிப்பது தான் பொற்கால ஆட்சியா.
வீண் செலவுகளுக்கும், வெற்று விளம்பரங்களுக்கும், பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காமல், அரசு கஜானாவை மட்டும் காலி செய்து, தமிழகத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் தி.மு. க., அரசை, தேர்தலில் , மக்கள் துரத்தியடிப்பது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.