Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 'இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்குவதா?': எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு கண்டனம்

'இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்குவதா?': எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு கண்டனம்

'இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்குவதா?': எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு கண்டனம்

'இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்குவதா?': எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு கண்டனம்

UPDATED : செப் 17, 2025 06:28 AMADDED : செப் 17, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : 'பாகிஸ்தான் கூட தன் சொந்த மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவிவிடவில்லை; ஆனால், இந்தியா தன் சொந்த குடிமக்கள் மீதே நிரந்தரமாக போர் தொடுத்திருக்கிறது' என, எழுத்தாளர் அருந்ததி ராய் சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.

அரசியல் ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், 'இந்தியா தன் சொந்த குடிமக்கள் மீதே நிரந்தரமாக போர் தொடுத்திருக்கிறது. சுதந்திரம் பெற்றது முதல், காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், தெலுங்கானா, பஞ்சாப், கோவா மற்றும் ஹைதராபாதில் இந்த சண்டை நடந்து வருகிறது.

'பாகிஸ்தான் கூட, இப்படி சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவிவிடவில்லை. ஆனால், ஜனநாயக நாடாக திகழும் உயர் ஜாதி ஹிந்துக்கள் கொண்ட இந்தியா, இப்படி சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்து வருகிறது' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அருந்ததி ராய் பேசிய இந்த வீடியோவை, எழுத்தாளர் ஆனந்த் ரகுநாதன் என்பவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

'அருந்ததி ராயை பொறுத்தவரை, 1961ல் நடந்த கோவா விடுதலை இயக்கம் என்பது கிறிஸ்தவர்களுக்கு எதிரான உயர் ஜாதி ஹிந்துக்களின் போர் என நினைக்கிறேன். இது எவ்வளவு அபாரமான கற்பனை' என, ஆனந்த் ரகுநாதன் விமர்சித்துள்ளார்.

'வெளியுறவு முன்னாள் செயலரும், ஜே.என்.யூ., பல்கலை.,யின் வேந்தருமான கன்வால் சிபிலும், ஆனந்த் ரகுநாதனின் பதிவை மேற்கோள்காட்டி, 'சொந்த நாட்டுக்கு எதிராக அருந்ததி ராய் விஷத்தை கக்கியுள்ளார்' என கண்டித்துள்ளார்.

இது குறித்து கன்வால் சிபில் கூறியதாவது:

சொந்த மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த ராணுவ நடவடிக்கையை மறந்து விட்டு, அருந்ததி ராய் தனக்கு வசதியாக பேசி இருக்கிறார். 2009ல் தெற்கு வசிரிஸ்தானில், ஆப்பரேஷன் ரஹத் - இ - நிஜத், 2014ல் வடக்கு வசிரிஸ்தானில் ஆப்பரேஷன் ஜர்ப் - இ - அஸ்ப் போன்ற ராணுவ நடவடிக்கைகள் எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது.

க டந்த, 2006ல் பலுசிஸ்தான் மக்களுக்கு எதிராக அப்போதைய அதிபர் முஷாரப் ராணுவ நடவடிக்கை எடுத்ததை அவ்வளவு எளதில் மறந்துவிட முடியுமா? பீரங்கிகளால் நவாப் அக்பர் புக்தியை முஷாரப் கொலை செய்யவில்லையா? அப்போது துவங்கப்பட்ட ஆப்பரேஷன் இன்று வரை நிற்கவே இல்லை.

ஏன், கடந் த ஆண்டு ஜூன் மாதம் கூட, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆப்பரேஷன் அசம் - இ - இஷ்டேகம் என்ற நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்திருந்தது.

அ வர் எதற்காக இப்படி பாசாங்கு செய்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானின் மோசமான சரித்திரத்தில் படிந்த ரத்தக்கறைகளை துடைக்கவே, அவர் இப்படி வெட்கமே இல்லாமல், கருத்து கூறியிருக்கிறார்.

இதற்காகவே ஹிந்துக்களை வில்லன்களாக சித்தரித் து, உண்மைகளை திரித்து, இந்தியா மீது வி ஷத்தை கக்கி இருக்கிறா.ர் இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us