Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

UPDATED : செப் 09, 2025 03:19 PMADDED : ஜூலை 04, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''அ.தி.மு.க., கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால், 2026 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

வரும் 2026 சட்டசபை தேர்தலில், தற்போது அரசுக்கு எதிர்ப்பான நிலையில் இருக்கும் கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதை பொறுத்தே தி.மு.க., கூட்டணியின் வெற்றி அமையும்.

சவால் இல்லை


விஜய் போட்டிருக்கும் திட்டம் என்ன என்பதும் இதில் அடங்கும். அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால்கூட, அது தி.மு.க.,வுக்கு சவாலாக இருக்காது.

ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் சேர்ந்தால், போட்டி கடுமையாக இருக்கும்; முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

Image 1438777

கடந்த தேர்தல்களில் போட்டியிட்டதை காட்டிலும், வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் எண்ணம். கட்சித் தொண்டர்களும், தலைவர்களும், நிர்வாகிகளும்கூட அதையே தான் விரும்புகின்றனர்.



கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் தான் போட்டியிட வாய்ப்பு கிட்டியது. அந்த நிலை, வரும் தேர்தலில் இருக்காது.

தமிழகத்தில் இருந்து பா.ஜ.,வை அகற்ற, தி.மு.க., போன்ற வலுவான, மதசார்பற்ற கட்சி தேவை தான்.

அதனாலேயே அக்கட்சிக்கும், மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் துணையாக இருக்கிறோம். அதில் மாற்றம் இல்லை.

அண்ணாதுரை காலத்தில் இருந்தே முதலாளிகளின் விருப்பங்களை பாதுகாத்து, நிறைவேற்றும் கட்சியாக தி.மு.க., இருக்கிறது என்பது எங்களின் பார்வை.

அந்த கட்சியின் அடிப்படை குணம், இன்று வரை துளிகூட மாறவில்லை. இதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை; வேதனையாக சொல்கிறோம்.

போராட்டம்


ஆலைகளில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைக்கு, மாநில தொழிலாளர் நலத்துறை உதவுவதில்லை. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும்கூட, உயர் நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் ஒரு தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைப்பதற்காக, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் முயற்சித்தனர்; ஆனால், முடியவில்லை.

தொழிலாளர்கள் திரண்டு பெரிய போராட்டம் நடத்தினர். இதெல்லாம் வரலாறு. இந்த மாதிரியான நிலை, முன் எப்போதும் இருந்ததில்லை.

குறிப்பிட்ட அந்த பன்னாட்டு தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத போக்குக்கு தமிழக அரசும் துணை நின்றது. தொழிலாளர் நலன் காக்கும் கம்யூனிஸ்ட்களால், இதை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? அதனாலேயே, பெரும் போராட்டம் நடந்தது.

ஒப்பிடவே முடியாது


திராவிட மாடல் அரசு நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசுகிறார். அதை தவறு என சொல்லவில்லை. ஆனால், எத்தனை விஷயங்களில், ஏற்கனவே சொன்ன விஷயங்களை திராவிட மாடல் அரசு செய்து முடித்தது?

கருணாநிதி அரசுடன் ஸ்டாலின் அரசை ஒப்பிடவே முடியாது; கூடாது. ஸ்டாலின், தமிழக மக்களுக்கு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.


எந்த இடத்திலும் மனித உரிமைகள் மீறப்படுவதை, நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us