எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை
எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை
எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை
ADDED : ஜூன் 02, 2025 04:04 AM

மதுரை பந்தல்குடி கால்வாயை துார்வார, பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை கால்வாயை துார்வார, முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று முன்தினம் மதுரை பந்தல்குடி கால்வாய், 2 கி.மீ., தொலைவுக்கு துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியானது. பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நள்ளிரவில் கால்வாயை பார்வையிடுவது போல், ஒரு நாடகத்தை நடத்தி இருக்கின்றனர்.
மதுரையில் பல பகுதிகள், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை துார்வாராமல் இருப்பதும் ஒரு காரணம். இதையடுத்து, 90 கோடி ரூபாய் செலவில், கால்வாயை துார்வாரி தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமைச்சர் நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கால்வாயை துார்வார, நான்கு ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதல்வர், நள்ளிரவில் சென்று பார்வையிடும் நாடகம், யாரை ஏமாற்ற; இந்த நாடகத்தால், யாருக்கு என்ன பயன்; மதுரை மக்களை முட்டாள்கள் என, முதல்வர் நினைத்து கொண்டிருக்கிறாரா?
கால்வாயை துார்வார, அமைச்சர் நேரு அறிவித்த, 90 கோடி ரூபாய் திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றுவீர்கள்.
- அண்ணாமலை
தமிழக பா.ஜ.,
முன்னாள் தலைவர்