ஓ.பி.எஸ்., பற்றி பேச வாய்ப்பூட்டு போட்ட இ.பி.எஸ்.,
ஓ.பி.எஸ்., பற்றி பேச வாய்ப்பூட்டு போட்ட இ.பி.எஸ்.,
ஓ.பி.எஸ்., பற்றி பேச வாய்ப்பூட்டு போட்ட இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 10, 2024 05:00 AM

ஓ.பி.எஸ்., சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, மூத்த நிர்வாகிகள் இ.பி.எஸ்.,யிடம் வலியுறுத்திய தகவல் வெளியான நிலையில், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க.,வில் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில், நீக்கப்பட்டவர்கள் குறித்தும், அவர்களை சேர்ப்பது குறித்தும் பேச, நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்குக் கிடைத்த தோல்வியை அடுத்து, கட்சி அமைப்பை சீர்படுத்த, 117 மாவட்டங்கள் பிரித்து, லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலர்களை மாற்றி, துடிப்புடன் செயல்படுகிற இளைஞர்களை நியமிக்க, இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதற்கு முன்பாக, இன்று முதல் 19ம் தேதி வரை, தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
முதல் கட்டமாக, 26 லோக்சபா தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள், இன்று முதல் வரிசையாக நடக்க உள்ளன. இதற்கிடையில், ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து யாரும் பேசக் கூடாது என, இ.பி.எஸ்., திடீர் தடை உத்தரவு போட்டிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.