உடையார் சமூகம் என்பதால் சிவலிங்கத்திற்கு அதிர்ஷ்டம்
உடையார் சமூகம் என்பதால் சிவலிங்கத்திற்கு அதிர்ஷ்டம்
உடையார் சமூகம் என்பதால் சிவலிங்கத்திற்கு அதிர்ஷ்டம்
ADDED : மே 29, 2025 06:16 AM

ஆத்துார்: உடையார் சமுதாயத்தை சேர்ந்த பொன்முடி, சமீபத்தில் கட்சி பதவி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தி.மு.க., உடையார் சமுதாயத்தினரை புறக்கணித்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாகவும், அதே சமுதாயத்தை சேர்ந்த சிவலிங்கத்துக்கு, ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறினர்.
ராஜ்யசபா பதவிகளுக்கு வரும் ஜூன், 19ல் தேர்தல் நடக்க உள்ளது. அதில், தி.மு.க.,வுக்கு, 4 இடங்கள் உள்ள நிலையில், 3 பேரை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதில் சேலம் கிழக்கு மாவட்டச்செயலர் சிவலிங்கம் இடம் பெற்றுள்ளார். இவர், சட்டசபை தேர்தலில் இருமுறை வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சிவலிங்கம் பெயர் முதலிடத்தில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அமைச்சர் வேலுவின் ஆதரவாளரான மலையரசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சிவலிங்கம், தேர்தல் பணிக்கு செல்லவில்லை. பின் முதல்வர் ஸ்டாலின், சிவலிங்கத்தை போனில் தொடர்பு கொண்டு ஆறுதலாக பேசினர்.
இந்நிலையில் உடையார் சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் கட்சி பதவி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது, தி.மு.க.,வில், கட்சி பதவி மற்றும் அமைச்சர்களில், உடையார் சமுதாயத்தினரை புறக்கணித்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாகவும், அதே சமுதாயத்தை சேர்ந்த சிவலிங்கத்துக்கு, ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடையார் சமுதாய வாக்கு வங்கியை தக்கவைக்க சிவலிங்கத்துக்கு ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளதாக தி.மு.க.,வினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.