ஜெய்ராம் ரமேஷ் மீது கோபம்!: டில்லி உஷ்ஷ்ஷ்
ஜெய்ராம் ரமேஷ் மீது கோபம்!: டில்லி உஷ்ஷ்ஷ்
ஜெய்ராம் ரமேஷ் மீது கோபம்!: டில்லி உஷ்ஷ்ஷ்
ADDED : ஜூன் 09, 2024 03:39 AM

புதுடில்லி: காங்கிரசின்
சீனியர் தலைவர் ஜெய்ராம் ரமேஷ். சோனியா, ராகுலுக்கு மிகவும் நெருக்கம்.
சமூக வலைதளங்களில் பா.ஜ.,வையும், பிரதமரையும் தொடர்ந்து கடுமையாக
விமர்சித்தபடியே இருப்பார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு
முன்பாக, 'வெளியேறும் பிரதமர் மோடி' என, 'எக்ஸ்' வலைதளத்தில்
குறிப்பிட்டார். ஆனால், தற்போது மீண்டும் மோடி மூன்றாம் முறையாக பிரதமர்
பதவியேற்க உள்ளார். எனவே, தன் நிலையை மாற்றி, 'கேர் டேக்கர் பிரதமர்' என
'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெய்ராம்.
இத்துடன்
நிற்காமல் 'சந்திரபாபு நாயுடு, நிதீஷ் தான் தேசிய ஜனநாயக கூட்டணியை
காப்பாற்றுகின்றனர்' என, கிண்டலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்
ஜெய்ராம்.
இது, அமித் ஷா உட்பட பல சீனியர் பா.ஜ., தலைவர்களுக்கு
கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தில் சில அமைச்சர்கள் இது குறித்து பேசியுள்ளனர். 'எதைப் பற்றியும்
கவலைப்படாமல் நம் வேலையைத் தொடர்வோம்' என கூறினாராம் மோடி. அப்போது,
'லோக்சபாவில் யார் எதிர்க்கட்சி தலைவராக வருவார்?' என, சிலர் கேட்டனராம்.
உடனே
உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வேறு யார், 'கடா கட் கட்' தான்' என கூற, ஒரே
சிரிப்பு தானாம். அமித் ஷா அப்படி குறிப்பிட்டது ராகுலை தான்.
தேர்தல்
பிரசாரத்தின் போது, 'காங்., கூட்டணி ஆட்சி அமைத்தால், பெண்கள்
அனைவருக்கும் 1 லட்சம் ரூபாய் வழங்குவோம்' என்றார் ராகுல். அதாவது, 'கடா
கட் கட்' என கூறியவர் ராகுல். இதை தான் கிண்டல் செய்துள்ளார் அமித் ஷா.