அ.தி.மு.க., நிர்வாகிகள் நாளை 'ஜாலி டூர்'
அ.தி.மு.க., நிர்வாகிகள் நாளை 'ஜாலி டூர்'
அ.தி.மு.க., நிர்வாகிகள் நாளை 'ஜாலி டூர்'
ADDED : மார் 23, 2025 12:45 AM

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலராகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருப்பவர் சண்முகம். இவர், மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளின் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரையும் டில்லிக்கு அழைத்துச் சென்று, சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக, நாளை காலை சென்னை ஏர்போர்ட்டிலிருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்படுகின்றனர்.
அ.தி.மு.க.,வில் பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் வகையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று, அவர்களை குஷிப்படுத்தும் சண்முகத்தின் நடவடிக்கையை, கட்சி நிர்வாகிகள் நன்றியுடன் பார்க்கின்றனர்.
டில்லி செல்லும் நிர்வாகிகள் அங்கு தாஜ் மகால், பொற்கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, 28ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் திரும்ப உள்ளனர்.
இதில் விடுபட்ட மற்ற அ.தி.மு.க., நிர்வாகிகளை அடுத்தடுத்து இதேபோல ஏற்பாடு செய்யும் 'டூர்'களுக்கு அழைத்துச் செல்வதாக சொல்லப்பட்டு உள்ளதாகவும், இந்த டூர் ஏற்பாடு தொடரும் எனவும் தெரிகிறது
- நமது நிருபர் -.