கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?
கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?
கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?

கணக்கு துவக்கிய பா.ஜ.,
ஆட்சி அதிகாரம் இருந்தும் கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை கலங்க வைத்திருக்கிறது. கூடவே, மாநிலத்தில் நுழையவே முடியாது என சொல்லப்பட்டு வந்த பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருப்பது, இடதுசாரிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரளாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கேரளாவின் சில இடங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டது.
ஓட்டு சரிவுக்கு காரணம்?
கம்யூனிஸ்ட்களின் பாரம்பரிய ஓட்டாகக் கருதப்படும் ஹிந்து ஈழவர் சமுதாய மக்களின் ஓட்டு, இந்த முறை பா.ஜ.,வுக்கு சென்றது. சிறுபான்மையினர் ஓட்டுகளையும் மார்க்சிஸ்ட் இழந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கூட்டணி போராட்டங்களை நடத்தியிருந்தாலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் காங்.,குக்கே ஓட்டளித்துள்ளனர்.
சிங்கங்களை கழுதை ஆளக்கூடாது!
கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். கட்சியினர் கருத்துக்களை தலைமை ஏற்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ.,வுக்கு கிடைக்க வேண்டிய பாரம்பரிய ஓட்டுகள் இம்முறை கிடைக்கவில்லை. சிறுபான்மையினரும் ஓட்டளிக்கவில்லை. பல பஞ்சாயத்துக்களில் பா.ஜ., இரண்டாமிடம் பெற்றுள்ளது. காரணம் என்ன என்று ஆராய வேண்டும். ஆயிரம் கழுதைகளை ஒரு சிங்கம் ஆளலாம், ஆனால், ஆயிரம் சிங்கங்களை ஒரு கழுதை ஆளக்கூடாது.
![]() |
நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும்!
கேரளாவில் கம்யூனிஸ்டுக்கு படுதோல்விதான். அதை ஒப்புக் கொள்கிறோம். ஆட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை. அதை சரிசெய்ய வேண்டும்.
![]() |