பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவர் யார்?
பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவர் யார்?
பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவர் யார்?
ADDED : ஜூன் 16, 2024 01:11 AM

பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. இவர் தற்போது மத்திய அமைச்சராகி விட்டார். எனவே, இவர் தேசிய தலைவர் பதவியில் இனி தொடர முடியாது. அடுத்த தலைவர் யார்? 'ஒரு பெண்மணியா... தென் மாநிலத்தைச் சேர்ந்தவரா?' என, பல வதந்திகள் பா.ஜ.,விலும், டில்லி அரசியல் வட்டாரங்களிலும் உலவுகின்றன.
பா.ஜ.,வின் சட்டதிட்டங்களை பொறுத்தவரை, தேசிய தலைவர் ராஜினாமா செய்தால், அடுத்த 45 நாட்களுக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம், புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. பா.ஜ.,வின் தேசிய செயற்குழு இந்த தலைவரை தேர்ந்தெடுக்கும்.
தன் நம்பிக்கைக்கு உரியவர்களை, மாநில பா.ஜ., தலைவர்களாக. புதிய தேசிய தலைவர் நியமிப்பார். 'தமிழக பா.ஜ.,விற்கு புதிய தலைவர் வருவாரா?' என்றால், அது நடக்காது என கூறப்படுகிறது. வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் வரை, அண்ணாமலை தான் தலைவராக நீடிப்பார். காரணம், 'அண்ணாமலையை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது' என, கறாராக சொல்லி விட்டாராம் மோடி.
தமிழிசை- - அண்ணாமலை தகராறு என சொல்லப்பட்ட பிரச்னை, அவர்கள் இருவரின் சந்திப்பிற்கு பின், அமைதியாகி விட்டது. எனவே, அண்ணாமலை தான் தமிழக பா.ஜ., தலைவராக தொடர்ந்து நீடிப்பார்.