Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ முதல்வர் விசிட்டால ஜனங்க படாதபாடு: முன்னாள் முதல்வர் டென்ஷன் ஆனாரு!

முதல்வர் விசிட்டால ஜனங்க படாதபாடு: முன்னாள் முதல்வர் டென்ஷன் ஆனாரு!

முதல்வர் விசிட்டால ஜனங்க படாதபாடு: முன்னாள் முதல்வர் டென்ஷன் ஆனாரு!

முதல்வர் விசிட்டால ஜனங்க படாதபாடு: முன்னாள் முதல்வர் டென்ஷன் ஆனாரு!

UPDATED : ஜூன் 18, 2024 07:02 AMADDED : ஜூன் 18, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நகர்வலம் செல்வதற்கு, சித்ரா புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

''என்னக்கா, ரெடியாகிட்டீங்களா...'' என்றவாறு, வீட்டுக்குள் 'என்ட்ரி'யானாள் மித்ரா.

''என்னப்பா... ஆளுங்கட்சி நடத்துன முப்பெரும் விழாவுக்கு போயிருந்தே... என்ன நடந்துச்சு...''

''அதையேன் கேக்குறீங்க... மேடையில கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இருக்கை கொடுத்து, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கவுரவிச்சாங்க.

''இதே மாதிரி, 28 வருஷத்துக்கு பிறகு கோவையில ஜெயிச்சுக் காட்டியிருக்கிறதுனால, மாவட்ட செயலாளர்களை கவுரவிப்பாங்கன்னு எதிர்பார்த்தாங்க. சி.எம்., ஸ்டாலின் மட்டும் பேச்சுக்கு இடையே, அமைச்சர்கள் முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா பெயரை குறிப்பிட்டாரு. மாவட்ட செயலாளர்கள் பெயர்களை சொல்லலை,''

கத்தி தொங்குது


''தொகுதியை கைப்பத்தி இருந்தாலும், எதிர்பார்த்த ஓட்டு கெடைக்கலைன்னு வருத்தம் இருக்குதாம். 2019ல மா.கம்யூ., வேட்பாளர் நடராஜன் வாங்குனதை விட, இப்போ தி.மு.க., வேட்பாளர் வாங்கியிருக்கிறது குறைவுங்கிறதுனால, நிர்வாகிகளை கவுரவிக்க முதல்வர் விரும்பலைன்னு, ஆளுங்கட்சி வட்டாரத்துல தகவல் பரவிட்டு இருக்கு. அதனால, மூனு மாவட்டத்துல ரெண்டு பேரு பதவிக்கு கத்தி தொங்குதுன்னு சொல்றாங்க,''

''இதே மாதிரி, ஜனங்க வரிப்பணத்துல வாங்குன சொகுசு கார்ல சிட்டியில வலம் வர்ற கார்ப்பரேஷன் அம்மணியை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு மாத்தப் போறதா, 'டாக்' ஓடிட்டு இருக்கு. அம்மணி பதவியை கைப்பத்துறதுக்கு, மண்டல தலைவர்களும், லேடி கவுன்சிலர்களும் 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க.

மக்களுக்கு அவஸ்தை


தோளில் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''முப்பெரும் விழா நடத்துனது ஆளுங்கட்சி தலைமைக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் கெத்தா இருந்தாலும், கோவை மக்கள் ரொம்பவே அவஸ்தைப்பட்டாங்க...'' என்றாள்.

''ஆமாக்கா... நீங்க சொல்றது உண்மைதான். விழாவுக்கு லட்சக்கணக்குல தொண்டர்கள் வருவாங்க. ஸ்டேட் முழுக்க பல்வேறு மாவட்டங்கள்ல இருந்து வருவாங்கன்னு போலீஸ்காரங்க கணக்குப்போட்டு, வாகனங்களை 'ரூட்' மாத்தி விட்டுட்டாங்க...''

''ஆனா, மைதானத்தை, 21 'பாக்ஸ்'சா பிரிச்சிருந்தாங்க. ஒரு 'பாக்ஸ்' மீடியாவுக்கு ஒதுக்கிட்டாங்க. ஒரு பாக்ஸ்க்கு, 2,000 பேருன்னு, 40 ஆயிரம் பேருக்கு 'சீட்' போட்டிருந்தாங்களாம். ஆனா, ஏகப்பட்ட 'சீட்' காலியா இருந்துச்சுன்னு சொன்னாங்க,''

''விழாவை காரணம் காண்பிச்சு, அவிநாசி ரோட்டுல பப்ளிக் வாகனங்களை அனுமதிக்காம, டிராபிக்கை திருப்பி விட்டுட்டாங்க. எல் அண்டு டி பைபாஸ்லயே எல்லா வண்டிகளையும், சிட்டிக்குள்ளே வரவிடாம நிறுத்திட்டாங்க. சிலபேரு பிளைட்டை கூட மிஸ் பண்ணுனாங்க. கட்சிக்காரங்க வருகையால, ஏர்போர்ட்டுல ஆரம்பிச்ச பிரச்னை, சிட்டி முழுக்க இருந்துச்சு.

அவிநாசி ரோட்டுல வழக்கமா போற பஸ்களை கூட அனுமதிக்கல; லட்சுமி மில் சந்திப்புல இருந்து புலியகுளம் வழியா... திருச்சி ரோடு போயி, எல் அண்டு டி பை பாஸ் வழியா திருப்பி விட்டு, இம்சை பண்ணிட்டாங்க. 'பப்ளிக்' ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க,''

''போலீஸ்காரங்க சொன்ன 'ரூட்'டுல வந்த கன்டெய்னர் லாரி, சிங்காநல்லுார் உப்பிலிபாளையம் மந்தை கருப்பராயன் கோவில் மரத்துல மோதுனதுல, ஒரு கிளை ஒடைஞ்சு விழுந்திருச்சு. கோவில் மரங்கிறதுனால, டிரைவர், கிளீனரை அந்த ஏரியா பப்ளிக் 'ரவுண்டு' கட்டிட்டாங்க. மோதுன வாகனம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்ததா இருந்துச்சு; பிரச்னை வேற விதமா மாறிடக் கூடாதுன்னு மன்னிச்சு விட்ருக்காங்க,''

''சி.எம்., நம்மூருக்கு வர்ற ஒவ்வொரு சமயமும் போலீஸ்காரங்க 'டிராபிக்'கை மாத்தி விடுறாங்க. மறுபடியும் அவரு வர்ற சமயத்துல, இதே மாதிரி செஞ்சாங்கன்னா, ஆளுங்கட்சிக்குதான் கெட்ட பேரு வரும்; சி.எம்., கோவைக்கு வர்றார்னு சொன்னாலே, நம்மூர் ஜனங்க பயப்பட ஆரம்பிடுச்சுடுவாங்க. போலீஸ்காரங்க செய்ற தப்பு, ஆளுங்கட்சிக்கு கெட்ட பேர் ஏற்படுத்திக் கொடுக்குதுன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''

'மாஜி'யின் போஸ்டர்


அ.தி.மு.க., தரப்புல ஒட்டியிருந்த போஸ்டரை பார்த்த சித்ரா, ''ஏம்ப்பா... சிட்டிக்குள்ள திடுதிப்புன்னு 'மாஜி' படத்தை போட்டு, 'புலி பாயும்'னு போஸ்டர் ஒட்டியிருக்காங்க...'' என, கேட்டாள்.

''ஆமாக்கா... நானும் பார்த்தேன். கொங்கு மண்டலம்னாலே அ.தி.மு.க., கோட்டைன்னு சொல்லிட்டு இருந்தாரு. லோக்சபா எலக் ஷன் சமயத்துல என்ன நினைச்சாரோ... திரை மறைவுல என்ன நடந்துச்சோ... தீவிர தேர்தல் பிரசாரம் செய்யாம நழுவிட்டாரு.

அ.தி.மு.க., மூனாவது இடத்துக்கு போயிருச்சு. தி.மு.க., தரப்புல, கொங்கு மண்டலம் எங்க கைக்கு வந்துருச்சுன்னு பெருமையா பேசிட்டு இருக்காங்க; இதுக்காகவே முப்பெரும் விழா நடத்தி கெத்து காட்டியிருக்காங்க. பதிலுக்கு ஏதாச்சும் செய்யணுமேன்னு, ஊர் முழுக்க மக்கள் கண்ணுல படுற மாதிரி, மெகா சைஸ் போஸ்டர் அச்சடிச்சு ஒட்டியிருக்காங்க,''

இ.பி.எஸ்., டென்ஷன்


''ஏர்போர்ட்டுல நடந்த பிரஸ் மீட்டுல இ.பி.எஸ்., டென்ஷன் ஆகிட்டாராமே...''

''அதுவா... நிருபர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும், நிதானமா பதில் சொல்லிட்டு வந்தாரு. பக்கத்துலேயே, வேலுமணியையும் நிக்க வச்சிருக்காரு. எலக்சன்ல தோத்துட்டீங்க... ஓட்டு எண்ணிக்கை குறைஞ்சிருக்கு... பலமான கூட்டணி அமைக்காததால, தோத்தீங்களான்னு அடுக்கடுக்கா ரிப்போர்ட்டர்ஸ் கேள்வி கேட்டாங்க,''

''டென்ஷனான இ.பி.எஸ்., 'என்னங்க... தோத்துட்டீங்க... தோத்துட்டீங்கன்னு திரும்ப திரும்ப சொல்றீங்க. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்னு ஒவ்வொரு தேர்தலையும், ஜனங்க பிரிச்சு பார்த்து, ஓட்டுப் போடுறாங்க.

''தேசிய கட்சி காங்கிரசோட தி.மு.க., கூட்டணி வச்சு போட்டி போட்டுச்சு. நாங்க, தேசிய கட்சியோட கூட்டணி இல்லாம போட்டி போட்டோம். 2019 லோக்சபா தேர்தல்லயும், இதே மாதிரி தான் ரிசல்ட் வந்துச்சு. 2021 தேர்தல்ல நாங்க, ஜெயிக்கலையா. அதே மாதிரி, 2026 தேர்தல் ஜெயிப்போம் பாருங்கன்னு சொல்லியிருக்காரு,''

''ஆனாலும், அவரு செஞ்ச தப்பை இன்னும் உணராம இருக்கறதா ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்களே...''

''ஆமாக்கா... கரெக்ட்டா சொன்னீங்க. வலுவான கூட்டணி அமைக்காம, தவற விட்டது தப்புங்கிறதை கட்சி தலைமையில இருக்கறவங்க புரிஞ்சுக்காம இருக்காங்க. கோவையில மட்டுமில்ல, நீலகிரி தொகுதியிலும் அ.தி.மு.க., மூன்றாவது இடத்துக்கு போயிருச்சு. அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் சரியா வேலை செய்யலைன்னு, முன்னாள் சபாநாயகர் தனபால் ஆதரவாளர்கள், கட்சி தலைமையில புகார் கொடுத்திருக்காங்களாம்,''

முட்டலுக்கு முற்றுப்புள்ளி


லங்கா கார்னரை கடந்து சென்றபோது, கோனியம்மன் கோவிலை பார்த்த மித்ரா, ''அக்கா, ஒரு வழியா மருதமலை கோவில் பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு...'' என்றாள்.

''ஏம்ப்பா... என்னாச்சு...''

''என்னக்கா... இப்படி கேட்டுட்டீங்க... மருதமலை கோவில் துணை கமிஷனருக்கும், அறங்காவலர் குழுவுக்கும் ஏழாம் பொருத்தமா இருந்துச்சு.

''மேம்பாட்டு பணிகள் செய்றதுல ரெண்டு தரப்புக்கும் இடையிலே முட்டல், மோதல், உரசல் நடந்துக்கிட்டே இருந்துச்சு.

''லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, மருதமலை கோவில்ல இருந்துதான், ஆளுங்கட்சிக்காரங்க ஆரம்பிச்சாங்க. அப்போ, ரெண்டு தரப்பு மோதல் விவகாரம், தலைமைக்கு போயிருக்கு.

எலக்சன் முடிஞ்சதும், துணை கமிஷனரை மாத்துனதுனால, அறங்காவலர் குழுவை சேர்ந்தவங்க 'ஹேப்பி'யா இருக்காங்க,''

''சிங்காநல்லுார் ஏரியாவுல 'எப்.எல்., 2 மதுக்கூடம்' வரப்போகுதாமே...''

''ஆமாக்கா... அதைக்கேள்விப்பட்டு, அந்த ஏரியா பப்ளிக் கொந்தளிச்சுப் போயிருக்காங்க. ஏற்கனவே கோவிலுக்கு பக்கத்துல ஒரு மதுக்கடை இருந்துச்சு; ரோட்டுல நின்னு, மது அருந்தியதால, ஏரியாக்காரங்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. ஏகப்பட்ட டைம் கம்ப்ளைன்ட் பண்ணி, அந்தக்கடையை மூட வச்சாங்க. இப்போ, 'எப்.எல்., 2 மதுக்கூடம்'ங்கிற பேருல திறக்கறதுக்கு, 'பிளான்' பண்ணி வேலை நடக்குதாம்...''

லஞ்ச அலுவலர் 'டிரான்ஸ்பர்'


இருவரும் பேசிக்கொண்டே, கார்ப்பரேஷன் கேன்டீனுக்குள் சென்றனர். அலுவலர் ஒருவரிடம் பேசி விட்டு வந்த சித்ரா, ''மித்து, வனத்துறை அலுவலகத்துல ஆபீசரை பார்க்கறதுக்கு கூட, லஞ்சம் கேட்ட ஒருத்தரை பத்தி பேசுனோமே... அதுக்கப்புறம்தான் அந்த ஆபீசருக்கே விஷயம் தெரிஞ்சுருக்கு.

''இம்மீடியட்டா... உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லி, அந்த அலுவலரை சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாராம். இனி, ஆபீசரை பார்க்க தடை இருக்காதுன்னு, வனத்துறை அலுவலர்கள் பலரும் சந்தோஷப்படுறாங்க,'' எனறபடி, டீ, போண்டா ஆர்டர் கொடுத்தாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us